மாணவி தற்கொலை- 17 வயது சிறுவன் உட்பட 3 பேரிடம் விசாரணை..!
11ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.
இந்நிலையில், 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகிறது.