நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் – திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

Default Image

விரைந்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 77 மாவட்ட செயலாளர்கள், 30 எம்.பிக்கள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய திமுக தலைவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், விரைந்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 10 பேர் இடம் பெற வேண்டும். பூத் கமிட்டியில் கட்டாயம் 2 மகளிர், 4 இளைஞர்கள் இருக்க வேண்டும்.

கட்சியில் அதிக அளவிலான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மேலும், ஒதுக்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளுடன் மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்களே பேசி உடன்பாடு எட்ட வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்