ரஜினியுடன் இணைய இருந்தாரா பாகுபலி ‘ராஜமௌலி’.?! கதை கூட ஓகே.! ஆனால்.!?

Default Image

ராஜமௌலியின் அப்பா விஜேந்திர பிரசாத் ரஜினியிடம் கதை கூறினாராம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையோடு நின்று விட்டதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் அவரது ரசிகர்களையும், குடும்ப செண்டிமெண்ட் கொண்டு குடும்பங்களையும் கவர்ந்ததே தவிர அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அவரது பிளாக் பஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் ரஜினிகாந்த்.

இல்லையென்றால் சென்ற 12.12.2021 ரஜினியின் பிறந்தநாளன்றே ரஜினியின் 169வது திரைப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கும். ஆனால், இன்னும் கதை இறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில், பாகுபலி. RRR பட பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் ஒரு மேடையில், ரஜினி சாருடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என கூறியிருந்தார். அதற்கான அடித்தளமும் அமைந்தது என்கின்றனர் சினிமா வட்டாரவாசிகள்.

அதாவது, ராஜமௌலியின் அப்பாவான விஜேந்திர பிரசாத் ( ராஜமௌலியின் படங்களுக்கு பெரும்பாலும் கதை எழுதுபவர் இவர் தான் ) ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார் அது ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்த சந்திப்பு பற்றி ராஜமௌலியிடம் அவரது அப்பா கூறினாராம்.

ஆனால், ராஜமௌலி சற்று தங்கியதாக கூறப்படுகிறது. அதாவது ராஜமௌலியின் படங்களில் இளம் நாயகர்கள் தான் ஹீரோக்கள். அவர்களால் தான் சண்டை ஆக்சன் காட்சிகளில் எந்தவித சமரசமும் இன்றி ராஜமௌலியால் வேலை வாங்க முடியும்.

ஆனால் ரஜினி போன்ற அனுபவசாலி நடிகரை வைத்து சண்டைக்காட்சிகளில் சமரசம் செய்ய அவருக்கு மனமில்லையாம். மேலும், ரஜினி தற்போது விரைவில் படத்தை முடிக்கும் இயக்குனர்களை நாடி வருகிறாராம். ராஜமௌலியிடம் சென்றால் வருடக்கணக்கில் ஷூட்டிங்கை இழுத்துவிடுவார்கள். அதுவும் பிரச்சனை என்பதால், ரஜினிகாந்த் – ராஜமௌலி திரைப்படம் பேச்சளவிலேயே நின்றுவிட்டதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly