அமேசானுக்கு ரூ.200 கோடி அபராதம் விதிப்பு – சிசிஐ
அமோசான் நிறுவனத்துக்கு இந்திய வர்த்தக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதிப்பு.
பிரபல சர்வதேச வணிக நிறுவனமான அமோசனுக்கு இந்திய வணிக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் சிசிஐ (Competition Commission of India) ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது. ஃபியூச்சர் ரீடைல் என்ற வணிக நிறுவனத்தில் செய்த முதலீடு குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததற்காக அமேசானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
20219-ஆம் ஆண்டில் ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய, அமோசனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்தம் குறித்த தகவல்களை அந்நிறுவனம் தெரிவிக்காமல் மறைத்ததாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் அமோசான் நிறுவனம் செய்த முதலீடு ரத்து செய்யப்படுவதாக கூறி, அபராதத்தை விதித்துள்ளது.