#BREAKING : இந்தியாவில் 100-ஐ தாண்டிய ஓமைக்ரான் தொற்று பாதிப்பு..!

வெளிநாடுகளில் இருந்து இதுவரை இந்தியா வந்தவர்களில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வரைஸானது, தொடர்ந்து உலகில் அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்தது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில், இந்த வைரஸானது உருமாற்றம் அடைந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், டெல்டா வகை கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.
அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து இதுவரை இந்தியா வந்தவர்களில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32 பேருக்கும், டெல்லியில் 22 பேருக்கும், ராஜஸ்தானில் 17 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மக்கள் அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்த்து, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025