#Breaking:அதிர்ச்சி…நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து 2 மாணவர்கள் பலி!

Default Image

நெல்லை:பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த நிலையில்,தற்போது கடந்த சில மாதங்களாகத்தான் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

இதற்கிடையில்,பழமையான பள்ளிகளின் கட்டடம் குறித்து முறையாக ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில்,நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் எட்டாம் வகுப்பு 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து,தீயணைப்பு துறை அதிகாரிகள்,கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி,கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி காயம் அடைந்த 3 மாணவர்கள்,அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து,அலுவலக கண்ணாடிகளை உடைத்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதனால்,காவலர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்