ஜனவரி 1-ம் தேதி முதல் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களின் பதிவு ரத்து – புதிய உத்தரவு..!

Default Image

டெல்லி அரசு ஜனவரி 1 முதல் 10 ஆண்டுகள் நிறைவடையும் அனைத்து டீசல் வாகனங்களின் பதிவை ரத்து என அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியை அரசு அறிவித்துள்ளது. அது என்னவென்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி, 2022-ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் 10 ஆண்டுகள் நிறைவடைந்த அனைத்து டீசல் வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படும்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு: 

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லியில் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள டீசல் வாகனங்களின் பதிவை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ரத்து செய்யும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.  தேசிய பசுமை ஆணையம் (NGT) ஜூலை 2016 இல் டெல்லி-NCR இல் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் பதிவு செய்வதற்கும் இயக்குவதற்கும் தடை தொடர்பான உத்தரவுகளை வெளியிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு வெளிவந்து கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகே இத்தகைய அறிக்கை தற்போது அதிகாரப்பூர்வ டெல்லி அரசாங்கத்தில் இருந்து வெளிவந்துள்ளது.

பழைய வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றலாம்:

10 அல்லது 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றலாம் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. டீசல் வாகனங்களின் உரிமையாளர்கள் 10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை மறுசீரமைக்க அரசு அனுமதிக்கும் என்றும் டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அரசு மானியம் வழங்கும்:

டீசல் காரை எலெக்ட்ரிக் காராக மாற்றும் செலவுக்கும் டெல்லி அரசு மானியம் அளிக்கும். தற்போது, ​​டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்ற எவ்வளவு மானியம் வழங்கப்படும் என்பதை டெல்லி அரசு தெளிவுபடுத்தவில்லை. இதற்கான திட்டத்தை டெல்லி அரசு தயாரித்து வருகிறது. இப்பணிக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

5 ஆண்டுகள் உத்தரவாதம்:

பெட்ரோல் அல்லது டீசல் காரை மின்சார காராக மாற்றலாம். எலக்ட்ரிக் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இதற்கான பணிகளை துவக்கியுள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் மாற்றப்பட்ட மின்சார காருக்கு முழு உத்தரவாதத்தையும் வழங்குகின்றன. இந்த உத்தரவாதம் ஐந்து வருடங்கள் வழங்கப்படுகிறது.

இங்கே மாற்றவும்:

ஹைதராபாத்தின் eTrio மற்றும் Northwayms நிறுவனங்கள் பெட்ரோல் அல்லது டீசல் காரை மின்சார காராக  மாற்றும் பணியை செய்து வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் எந்த பெட்ரோல் அல்லது டீசல் காரையும் எலக்ட்ரிக் காராக மாற்றுகின்றன. உங்கள் காரை மின்சாரமாக மாற்ற விரும்பினால், இந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்