இன்று குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் தகனம் ..!

மத்தியபிரதேசம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது
டிசம்பர் 8 ஆம் தேதி நிகழ்ந்த IAF ஹெலிகாப்டர் விபத்தில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் இறந்தனர்.இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த வருண் சிங் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் 7 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் பெங்களூரில் இருந்து போபால் விமான நிலையத்திற்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இங்கு மத்திய பிரதேச முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் , அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராணுவ வாகனத்தில் போபால் சன் சிட்டி காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் ராணுவ வாகனத்தை பின்தொடர்ந்து சென்று சிறிது தூரம் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சந்த் ஹிர்தராம் நகரில் (பைர்கர்) இராணுவ மரியாதையுடன் குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று முதல்வர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024