வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Default Image

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் (Voter ID Card) ஆதார் எண்ணை (Aadhar Card) இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் சீர்திருத்தம் மசோதா தொடர்பான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளது.

அதில் முக்கியமானது, வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதாகும். அதுவும், ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்வதற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் உள்ளன. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகும்.

  • முதலில் https://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • உங்களின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் அல்லது வாக்காளர் எண் பதிவு செய்ய வேண்டும்.
  • எந்த மாநிலம், மாவட்டம், தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, தந்தை பெயரைக் குறிப்பிட வேண்டும்.
  • இந்த விவரங்களைப் பதிவு செய்தபின், சர்ச் பட்டனை க்ளிக் செய்து, அரசின் டேட்டாபேஸில் நீங்கள் பதிவிட்ட விவரங்கள் பொருத்தமாக இருந்தால் அவை திரையில் தெரியவரும்.
  • திரையின் இடது பக்கத்தில் ஆதார் எண்ணைப் பதிவிடுங்கள் என்ற கட்டம் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயர், ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் சரியாக இணைத்தபின், அதைச் சரிபார்த்தபின், சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்.
  • திரையில் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்