ஓமைக்ரான் அச்சுறுத்தல்: தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு- அமைச்சர் அன்பில் மகேஷ்..!
ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தினசரி வகுப்புகள் நடத்துவது குறித்து 25-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , 6 முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி வரும் டிசம்பர் 25ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ஓமைக்ரான் வந்துள்ளதால் முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் திருப்புதல் தேர்வு நடக்கும் என கூறினார்.
ஜனவரி 3 முதல் சுழற்சி முறை இன்றி தினமும் வகுப்புகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் வருகின்ற 25ஆம் தேதி ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.