வங்கதேச போரின் பொன்விழா ஆண்டு:பிரதமர் மோடி மரியாதை!

Default Image

1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு,தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.அப்போது,சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர்.மேலும்,இப்போரில்,இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது.மேலும்,இந்த நாளில் வங்கதேச போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

அதன்படி,1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி,இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில்,1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு,போரில், தாய்திருநாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்  தொடர்ந்து,தேசிய போர் நினைவிடத்தில் பார்வையாளர்கள் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.அதில்,

“ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக, 1971 போரின் வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். ஈடு இணையற்ற வீரக் கதைகளை எழுதிய துணிச்சலான வீரர்களை நினைத்து குடிமக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்”,என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்