கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 என்று கணக்கிட்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள். சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் தெரிவித்தார். இந்த நிலையில், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 என்று கணக்கிட்டு வழங்க ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025