#BREAKING : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை…! பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!

Default Image

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துரையின் சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 1 கிலோ 130 கிராம் தங்கம், 40 கி.கி வெள்ளி பொருட்கள், வங்கி பாதுகாப்பு பெட்டகங்களின் சாவி, வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் போன்றவையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திரு.P.தங்கமணி (வயது-60) சட்டமன்ற உறுப்பினர், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி என்பவர் தான் முன்பு தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த போது 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலத்தில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக Rs.4,85,72,019/- சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் திரு.தங்கமணி, அவரது மகன் திரு.தரணிதரன் மற்றும் அவரது மனைவி திருமதி.சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 8/2021 u/s 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act, 1988 மற்றும் 109 IPC & 12, 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018 என்ற பிரிவின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு இடங்களில் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 69 (நாமக்கல் மாவட்டம்-33, சென்னை-14, ஈரோடு-8, சேலம்-4, கோயம்புத்தூர்-2, கரூர்-2, கிருஷ்ணகிரி – 1, வேலூர்-1, திருப்பூர்-1, பெங்களுர் – 2, ஆந்திர மாநிலம் சித்தூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று (15.12.2021) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி சோதனையில் பணம் ரூ.2,37,34,458/-, தங்க நகைகள் 1.130 கிலோகிராம், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,16,37,000/-, சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்