‘இது புதிதல்ல’ – தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது – அமைச்சர் ஏ.வே.வேலு

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடப்பது புதிதல்ல என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பால பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஏ.வ வேலு, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடப்பது புதிதல்ல என்றும், தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், அதிமுகவினர் நிரபராதி என்று நிரூபித்தால், நீதிமன்றம் விடுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.