ஓமைக்ரான் பரவல் : தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர்!
ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளதால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.