#Breaking:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு – சிபிஐக்கு மாற்றம்!
மதுரை:டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 5575 தேர்வு மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.அதன்பின்னர், தேர்வு முடிவு வந்தபோது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்ததால் சர்ச்சையாகியது.இதனையடுத்து,எழுந்த குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில்,டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில்,வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும்,வழக்கை நேர்மையாகவும்,விரைவாகவும் விசாரித்து,தேர்வு முறைகேடு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவு நகல் கிடைத்தவுடன் சிபிஐ தரப்பில் விசாரணை தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.