வாரணாசி : இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
வாரணாசியில் இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர்.
அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். இன்றும் பிரதமர் அம்மாநில முதல்வர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.