நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்நிலையில், நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அர்ஜுன் பதிவிட்டுள்ளார்.
அதில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் மாஸ் அணிவதை புறக்கணிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் கமல் அமெரிக்கா சென்று வந்த நிலையில், லேசான இருமல் இருந்துள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் கமலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024