மகிழ்ச்சி…வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் கையடக்க கருவி – ஐஐடி கான்பூர் கண்டுபிடிப்பு!

Default Image

கான்பூர்:வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஒரு சிறிய சோதனைக் கருவியை ஐஐடி கான்பூர் கண்டுப்பிடித்துள்ளது.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமானது(ஐஐடி கான்பூர்), வெறும் 5 கிராம் மண்ணை ஒரு டெஸ்ட் மாதிரியாகப் பயன்படுத்தி மொபைல் செயலி மூலம் வெறும் 90 வினாடிகளில் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் ஒரு சிறிய சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.ஐஐடியில் வேதியியல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயந்த் குமார் சிங், பல்லவ் பிரின்ஸ், அசார் அகமது, யஷஸ்வி கெமானி மற்றும் முகமது அமீர் கான் ஆகியோர் அடங்கிய குழுவால் இந்த சாதனம் உருவாக்கப்பட்டது.

இந்த முதல் வகை கண்டுபிடிப்பானது, இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.இந்த கருவி ‘பு பரீக்ஷக்’ என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஸ்மார்ட்போன்களில் நிகழ்நேர மண் பகுப்பாய்வு முடிவுகளை வழங்குகிறது.பு பரீக்ஷக் அப்ளிகேஷன்(Bhu Parikshak) கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது என்று ஐஐடி-கான்பூர் தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த சாதனம் மொபைல் ஆப் மூலம் பயனர்களுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.இது உள்ளூர் மொழிகளில் கிடைக்கிறது.இதனால் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கூட சாதனத்தையும் மொபைல் பயன்பாட்டையும் எளிதாகக் கையாள முடியும் என்று ஐஐடி-கான்பூர் தெரிவித்துள்ளது.

கருவி செயல்படும் முறை:

இந்த கையடக்க மற்றும் கம்பியில்லா மண் பரிசோதனை சாதனத்திற்கு,ஐந்து கிராம் உலர் மண் தேவைப்படுகிறது. 5 செமீ நீளமுள்ள உருளை வடிவ இந்த சாதனத்தில் மண்ணை நிரப்பியவுடன், அது புளூடூத் மூலம் மொபைலுடன் தன்னை இணைத்துக் கொண்டு 90 வினாடிகளுக்கு மண்ணை பகுப்பாய்வு செய்யத் தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து,பகுப்பாய்விற்குப் பிறகு அதன் முடிவுகள் மண் சுகாதார அறிக்கையின் வடிவத்தில் மொபைல் திரையில் தோன்றும். மேலும்,பரிந்துரைக்கப்பட்ட அளவு உரங்களுடன் அறிக்கையும் வருகிறது.குறிப்பாக,நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆர்கானிக் கார்பன் உள்ளிட்ட ஆறு முக்கியமான மண் அளவுருக்களை இந்த சாதனம் கண்டறிய முடியும்.அதே சமயம்,வயல் மற்றும் பயிர்களுக்கு தேவையான அளவு உரங்களையும் இந்த சாதனம் பரிந்துரைக்கிறது.

இது தொடர்பாக,ஐஐடி கான்பூர் நிறுவன இயக்குனர் அபய் கரண்டிகர் கூறுகையில், “விவசாயிகள் எங்கள் பராமரிப்பாளர்கள், அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கஷ்டம் அவர்கள் மண் பரிசோதனை செய்து முடிவுக்காக பல நாட்கள் காத்திருக்கும் அவலம். இனி இந்த அவலம் அவர்களுக்கு இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்