பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றுள்ள, ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து, நடப்பு ஆண்டுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ள நிலையில், ஹர்னாஸ் சாந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்துவுக்கு வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும், பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Congratulations to Harnaaz Sandhu on being crowned Miss Universe. Best wishes to her for her future endeavours.
— Narendra Modi (@narendramodi) December 13, 2021