#BREAKING : புத்தாண்டு கொண்டாட்டம் – கடற்கரையில் அனுமதி இல்லை..! – தமிழக அரசு
கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புத்தாண்டு தினத்தன்று, அதாவது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.