இன்றைய (14.12.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்றைய நாள் மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை காணப்படுவதால் அதனை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது பதட்டம் காரணமாக உடல் ஆரோக்கியமாக காணப்படாது.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. கடவுளை வழிபடுவதன் மூலம் மனம் அமைதி அடையும். உத்தியோகத்தில் பணிகளை எளிதாக செய்ய இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்று பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். நல்ல மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் இன்று நல்ல புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். இன்று உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பெற்றோரிடம் நல்ல புரிந்துணர்வுடன் இன்று இருப்பதால் காதல் வாழ்க்கை குறித்து ஆலோசிப்பது நல்லது. பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களது முயற்சியின் மீது நம்பிக்கை வைத்திருங்கள். உத்தியோக வேலையில் இன்று சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட நேரும். பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி மற்றும் சளி உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாளில் தடைகள் அதிகம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியத்தை பரிசோதிப்பது நல்லது.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக அமைய அனுசரித்து நடப்பது அவசியம். உத்தியோக இடத்தில் அதிக பணிச்சுமை அமையும். காதலுக்கு இன்று உகந்த நாள் இல்லை. பணம் அதிகமாக செலவாகும். உங்களது துணையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை பிரச்சனை ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.
தனுசு : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை காணப்படும். இன்று உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்காது.
மகரம் : இன்று உங்களுக்கு சீரான நாளாக அமையும். உத்தியோக இடங்களில் அசௌகரியமாக உணர்வீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவுகள் அதிகமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோக வேலையில் நல்ல பெயர் கிட்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மீனம் : உங்கள் சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தியோக வேலையில் திருப்தி காணப்படாது. உங்கள் மனைவியிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.