முதல்முறையாக ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு..! எங்கு தெரியுமா..?

ஓமைக்ரான் பாதிப்பால் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதல் முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது .கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொற்று பரவல் பரவி வந்த நிலையில், இந்த தொற்று பலவிதங்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது,.
அந்த வகையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை தொற்று பரவல் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்று, தென்னாப்பிரிக்காவிலிருந்து தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் பிரிட்டனில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் பாதிப்பால் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதல் முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025