“பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பிற்போக்குத்தனமான கேள்வி” – சிபிஎஸ்இ-க்கு டிடிவி தினகரன் கண்டனம்!

Default Image

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்து விட்டது என்றும்,

மேலும்,இதற்கு சரியான தலைப்பிடுமாறு தரப்பட்டுள்ள நான்கு வாய்ப்புகளில், குழந்தைகளின் ஒழுங்கீனத்துக்கு யார் பொறுப்பு, வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள், பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் என இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான இத்தகைய கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும்,இதற்கு சி.பி.எஸ்.இ நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்