அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் – மு.க.ஸ்டாலின்..!

Default Image

2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் CREDAI அமைப்பின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் வீடு,மனை பத்திரப்பதிவு மூலம் ரூ.5973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை கீழடி அகழாய்வு மூலம் அறியமுடிகிறது. மாநில பொருளாதார வளர்ச்சி சிறப்பாக முன்னேறி வருவதை குறியீடுகள் காட்டுகின்றன.

கடந்த காலாண்டில் தொழிற்சாலைகள் சேமிப்பு கிடங்குகள் 4.4 மில்லியன் சதுரஅடி பரப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது. கட்டுமானத்துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு, மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாரள முறை அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம் , குத்தம்பாக்கம்  பேருந்து நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். 2026 முதல் 2046-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் வளர்ச்சிக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலம் 5 ஆண்டில் இருந்து 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும். 2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்