ஹெலிகாப்டர் விபத்து குறித்து பதிவு : நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது..!

Default Image

பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில்  நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் விமர்சனம் செய்தததாக கைது செய்யப்பட்டார்.

குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி  நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு நாடு முழுக்க பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையில்,  சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்தனர். இதனால், விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கீரனூர் காவல் நிலையத்தில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது. அதில், பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் விமர்சனம் செய்தததாக தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், பாலசுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து காவல்துறை அவரை கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

hmpv live
Rajinikanth
earthquake nepal
mk stalin net exam
Kanguva
hmpv Ma. Subramanian
icc bgt 2024 2025