#BREAKING: கேரளாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!
கேரள மாநிலத்தில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வந்த நபருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வந்த விமானத்தில் 147 பேர் பயணித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.