நான் இந்து; ஆனால் இந்துத்வாவாதி அல்ல – ராகுல் காந்தி
நான் இந்து, ஆனால் இந்துத்வவாதி அல்ல. இந்துவுக்கும் இந்துத்வாவாதிக்கும் உள்ள வேறுபாடு என்பது காந்திக்கும் கோட்சேவுக்கு உள்ள வேறுபாடு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலில் இந்து மற்றும் இந்துத்வாவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையே தான் போட்டி நடைபெறுகிறது. நான் இந்து, ஆனால் இந்துத்வவாதி அல்ல. இந்துவுக்கும் இந்துத்வாவாதிக்கும் உள்ள வேறுபாடு என்பது காந்திக்கும் கோட்சேவுக்கு உள்ள வேறுபாடு என தெரிவித்துள்ளார்.