இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில்,’இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2021