உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டம்: விரும்பிய இடத்திற்கு பணியிட மாறுதல் – காவல்துறையினர் மகிழ்ச்சி!

உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.விரும்பிய இடத்திற்கு செல்வதால் காவலர்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களின் நலன்காக்க மாவட்ட, மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது.
அதன்படி,சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து,அவர்களின் பணி மாறுதல் விருப்பம் தொடர்பான மனுக்களை பரிசீலனை செய்தார்.
இந்நிலையில்,”உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ் 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாவட்ட¸ மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறைத் தலைமை இயக்குநர் அளவில் மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025