இவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறையும்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
எவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
உலகில் உள்ள உயிர்களை படைத்த இறைவனுக்கு அதனை அழிக்கவும் தெரியும். யாருக்கும் உயிரை கொல்வதற்கான அனுமதி இல்லை. அதனால் எறும்பு முதல் உயிர்கள் அனைத்தும் மனிதர்களால் இறந்தால், தோஷம் உண்டாகும். சிலர் எறும்பு வராமல் இருப்பதற்கு சாக்பீஸ் போடுகின்றனர். இதனை உண்ணும் எறும்பு இறந்து விடுகின்றது. எறும்பு மட்டுமல்லாது கரப்பான், பூச்சி, பல்லி போன்ற உயிர்களும் இதனால் இறக்கின்றன.
இவ்வாறு உயிர்கள் இறப்பது தோஷத்தை ஏற்படுத்தும். இந்த இறந்த உயிர்கள் நாள் கணக்கில், மாதக்கணக்கில் வீட்டில் அகற்றப்படாமல் இருந்தால் அது வீட்டில் உள்ள நிம்மதி குலைய வழிவகுக்கும். வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். அதனால் வீட்டில் இறந்த உயிர்கள் பல்லி, எலி, எறும்பு என எது இருந்தாலும் அதனை அகற்றி விடுங்கள். இவற்றை வாரக்கணக்கில் அகற்றாமல் வைத்திருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இது உங்கள் குடும்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எப்போதும் வீட்டில் உள்ள மூலை முடுக்குகள் சுத்தமாக வைத்திருக்க பாருங்கள். சிலந்தி வலை இருந்தால் அதனை அகற்றி விடுங்கள். இவ்வாறு தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நடக்கவேண்டிய நன்மைகள் தொடங்கும். அதனை அடுத்து வீட்டில் எல்லா இடங்களிலும் சாம்பிராணி தூப வாசனையோடு வைத்திருக்க பாருங்கள். அதனை வீடு முழுவதும் பரவ விடுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.