இன்று இரவு ஆன்லைன் வங்கிச் சேவைகள் இயங்காது! – எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு
ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவிப்பு.
டிசம்பர் 11-ஆம் தேதி (இன்று இரவு) 11.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.30 மணி வரை ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. வழக்கமாக தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கிச் சேவைகள் இன்று இரவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறந்த வங்கி சேவை அனுபவத்தை வழங்க முயற்சிப்பதால், தங்கள் வாடிக்கையாளர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
We request our esteemed customers to bear with us as we strive to provide a better Banking experience. pic.twitter.com/LZsuqO2B0D
— State Bank of India (@TheOfficialSBI) December 10, 2021