#BREAKING: பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி..!

பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் பலி உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சிறப்பு ராணுவம் விமானம் மூலம் முப்படை தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேரின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
8 மணி அளவில் 13 பேரின் உடல்கள் டெல்லி பாலம் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி மலர் தூவியும், மலர் வளையம் வைத்து செலுத்தினர். பின்னர், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்த்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆறுதலை தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025