மீண்டும் அதிர்ச்சி …. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட குறவர் குடும்பம் …!

Default Image

நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்த இரு தினங்கள் கூட ஆகாத நிலையில் நாகர்கோவிலில் இதே போன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்திற்குள் ஏறிய நாகர்கோவிலை சேர்ந்த குறவர் குடும்பத்தினரின் உடமைகளை நடத்துனர் ரோட்டில் தூக்கி வெளியில் எறிந்து, குடும்பத்தோடு பேருந்தில் இருந்து வெளியே அனுப்பியுள்ளார்.

வயது முதிர்ந்த தாய், தந்தை இருவருடனும் வந்த ஒரு குழந்தை மூவரையும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டு, அவர்களது உடமைகளை வெளியில் தூக்கி எறிந்து வெளியே செல்லுங்கள் என கூறுகிறார். குழந்தை எதற்காக இறக்கி விடப்படுகிறோம் என்பதே தெரியாமல் கதறி அழ,  முதியவர் என்ன செய்வதென்று அறியாமல் நடுரோட்டில் நிற்கிறார். இதுபோன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்வது பலரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI