டெல்லியில் உள்ள பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி அஞ்சலி!

டெல்லியில் உள்ள பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது. இதனையடுத்து இன்று காலை வெலிங்டனில் 13 பேரின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டு அங்கிருந்து இராணுவ சிறப்பு விமானம் மூலம் உடல்கள் டெல்லி சென்றது. இந்நிலையில், டெல்லியிலுள்ள பிபின் ராவத் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025