மாஸ்டருக்கு 8வது இடம்.! முதலிடம் கொரோனாவுக்கு.! டிவிட்டர் வெளியிட்ட புள்ளி விவரம்.!

Default Image

2021இல் இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான Master திரைப்படம் தான்.

வருடா வருடம் டிவிட்டர் இணையத்தளமானது தங்களது தளத்தில் எந்த விவரத்தை அதிகம் தேடுகிறார்கள், எந்த ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்களை வெளியிடும்.

அந்த வகையில், இந்த 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் விவரம் பற்றி தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், முதலிடம் covid19-க்குத்தான், அதற்கடுத்து FormarProtest (டெல்லி விவசாயிகள் போராட்டம் ), TeamIndia, Tokiyo2020, IPL2021, INDvENG, Diwali ஆகிய ஹேஸ்டேக்குகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான Master திரைப்படம் தான். இந்த வரிசையில் Master திரைப்படம் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த இடத்தை Master திரைப்படம் பிடிக்க உலகமெங்கும் ஹிட்டடித்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் பெரும் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த இடங்களை Bitcoin மற்றும் PermissionToDance (புகழ்பெற்ற BTS இசைக்குழுவினரின் பாடல்) ஆகிய ஹேஸ்டேக்குகள் பெற்றுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested