கடினமான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையும், தேசத்தையும் வழிநடத்திய தேவதை – ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த அப்பதிவில், ‘வாழ்வின் இடிபாடுகளிலிருந்து மீண்டெழுந்து,கடினமான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையும், தேசத்தையும் வழிநடத்திய தேவதை. தியாகம்,கண்ணியம்,அன்பு,எளிமை,அர்ப்பணிப்பின் அடையாளம். அன்பின் கரம்பற்றி இந்த தேசத்தில் அடியெடுத்து வைத்து அதன் ஆன்மாவோடு கலந்துவிட்ட அற்புதம்.நீடுழி வாழ்க அன்னையே!’ என பதிவிட்டுள்ளார்.
வாழ்வின் இடிபாடுகளிலிருந்து மீண்டெழுந்து,கடினமான காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையும், தேசத்தையும் வழிநடத்திய தேவதை. தியாகம்,கண்ணியம்,அன்பு,எளிமை,அர்ப்பணிப்பின் அடையாளம். அன்பின் கரம்பற்றி இந்த தேசத்தில் அடியெடுத்து வைத்து அதன் ஆன்மாவோடு கலந்துவிட்ட அற்புதம்.நீடுழி வாழ்க அன்னையே! pic.twitter.com/B8SxYPUCNq
— Jothimani (@jothims) December 9, 2021