#HelicopterCrash:விபத்துக்குள்ளாவதற்கு முன் எடுக்கப்பட்ட ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் – வீடியோ உள்ளே!

Default Image

நீலகிரி:விபத்துக்குள்ளாவதற்கு முன் எடுக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிடங்கள் அடங்கிய வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

நாட்டின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு நேற்று சென்ற எம்ஐ-17 என்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து முழுமையாக எரிந்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து,ஹெலிகாபடர் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விமானப்படை சார்பில் நேற்று உத்தரவிடப்பட்டது.அதன்படி, விபத்து நடந்த காட்டேரி வனப்பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.விமானப்படை ஹெலிகாப்டர் பாகங்கள் ஏற்கனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,தற்போது விமானப்படை தளபதி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.அவருடன் இணைந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் தமிழக தடவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில்,5 அதிகாரிகள் அடங்கிய தடவியல் துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த குழுவினர் காட்டேரி வனப்பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில்,விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில்,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரை ஏற்றிச் சென்ற எம்ஐ-17 ஹெலிகாப்டர் நேற்று குன்னூர் அருகே விழுந்து நொறுங்குவதற்கான இறுதி தருணங்கள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.அதில்,ஹெலிகாப்டர் தோன்றிய சில வினாடிகளில் மேகமூடத்தின் நடுவே சென்று மறைவது போன்று பதிவாகியுள்ளது.இந்த வீடியோவினை சுற்றுலாப் பயணிகள் சிலர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்