#HelicopterCrash : நாளை ராணுவ விமானம் மூலம் மறைந்த முப்படை தளபதியின் உடல் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.!

நாளை மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்து. அதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தனர்.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில், நாளை மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி சடங்கு நடைபெற இருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வரும் டிசம்பர் 10 (வெள்ளி கிழமை) டெல்லியில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
அதன் பின்னர், டிசம்பர் 10 வெள்ளிக்கிழமையன்று இருவரது உடல்களும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் டெல்லி கண்டோன்மன்டில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025