#BREAKING: வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் முதல்வர் விசாரிப்பு..!

வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரும் வந்துள்ளனர்.
குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிர் இழந்தனர். பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில் வெலிங்டன் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணுவ அதிகாரிகளுடன் விபத்து குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், சிகிச்சையில் உள்ள விமானப்படை கேப்டனின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் முதலமைச்சர் விசாரித்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.