#HelicopterCrash : ஹெலிகாப்டர் விபத்து – இன்று மாலை பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

Default Image

பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ராணுவ விமானம் விபத்து குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்