#BREAKING: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

Default Image

குன்னூர் அருகே ராணுவ ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து, இந்த விபத்தில் 7 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 4 பேரின உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர். பிபின் ராவத் பயணம் செய்த இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து தரையிறங்குவதற்கு 10 கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்துள்ளது.

இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்துள்ளனர். பிபின் ராவத் நிலைமை என்ன என்பது தான் தற்பபோதைய பெரும் கேள்வியாக உள்ளது. குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விமான பெட்ரோல் என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
gold rate
AUSvsIND
Good Bad Ugly
Congress - BJP
Low pressure area
Valery Zaluzhny