மயானங்களில் சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும்..!
மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் ஓடை புறம்போக்கு பகுதியில் உடல்களை அடக்கம் செய்வதால் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மகாதேவன், மடூர் கிராமத்தில் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான இடத்தை மயானத்தை அமைப்பதற்கு இடஒதுக்க வேண்டும்.
சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அனைத்து கிராமங்களிலும் அமைக்க வேண்டும். பொது மயானங்களை அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.