தானாக வரும் தடுப்பூசி சான்றிதழால் குழப்பத்தில் மக்கள்..! பொது மருத்துவத் துறை இயக்குனர் அதிரடி உத்தரவு..!
கொரோனா தடுப்புபூசி போட்டதாக போலி சான்றிதழை தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில இடங்களில் தடுப்பூசி போடாமலேயே, 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு விட்டதாக வரும் சான்றிதழால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, மக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், கொரோனா தடுப்புபூசி போட்டதாக போலி சான்றிதழை தரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏஜென்டுகள், இடைத்தரகர்களை பொதுமக்கள் அணுக வேண்டாம் என்றும், பொது மருத்துவத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்திய பின்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆதார் எண்களை நண்பர், தெரிந்த களப்பணியாளர்கள் இடம் தந்து தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் பெறுவதாக புகார் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. .