இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை வெளியானது..!
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிககளில் விளையாடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா..? என்ற கேள்வி எழுந்தது. பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தென் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடர் ஒத்திவைப்பதாகவும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிககளில் விளையாடவுள்ளது. இந்த போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும், இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும், மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.