ஜெயலலிதா ஐ.டி வழக்கு: தீபக், தீபாவை சேர்க்க ஆணை..!
ஜெயலலிதாவின் வருமான வரி தொடர்பான வழக்கில் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 2008,2009-ல் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறி நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதுகுறித்து ஜெயலலிதா தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை தொடர்ந்து, அவர் மீதான குற்றசாட்டில் இருந்து விடுவித்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.
அந்த வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மேல்முறையிடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் நிலையில், இந்த வழக்கு இன்று மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது . அப்போது, ஜெயலலிதா மரணத்த்திற்கு பிறகு அவரது வாரிசுகளாக தீபக், தீபா அறிவிக்கப்ட்டுள்ளனர். இதனால், இந்த வழக்கில் தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.