#BREAKING : அதிமுக உட்கட்சித் தேர்தல்: நாளை விசாரணை..!
அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட இரண்டு பேருக்கு மட்டுமே வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாளை தேர்தல் என அறிவித்துவிட்டு இன்று மாலையே முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் உறுப்பினர் ஜெயச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுவே தாக்கல் செய்யாமல் வழக்கை எப்படி விசாரிப்பது என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாக்கல் செய்துள்ளதாகவும் இன்று மாலை வழக்கு பட்டியலில் இறுதியில் எடுக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவித்தனர். மேலும், குற்றச்சாட்டுகளை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் ஜெயச்சந்திரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.