பரபரப்பு: நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு; 13 பேர் கொல்லப்பட்டனர்..!
நேற்று நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் உயிரிழந்தனர்.
நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பொது மக்கள் உயிரிழந்தனர். அசாம் ரைஃபிள்ஸ் பாதுகாப்புப் படையினருக்கு மோன் மாவட்டத்தி தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்தினர். அப்போது அருகில் உள்ள நிலக்கரித் தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு அபோகுதியில் உள்ள கிராம இளைஞர்கள் பிக்-அப் டிரக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தவறுலதாக பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு படையினரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கிராம மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ ட்வீட்டரில், ஓட்டிங்கில் பொதுமக்களைக் கொன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உயர்மட்ட எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், துப்பாக்கிச் சூடு எப்படி, எப்போது, எந்த சூழ்நிலையில் நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
The unfortunate incident leading to killing of civilians at Oting, Mon is highly condemnable.Condolences to the bereaved families & speedy recovery of those injured. High level SIT will investigate & justice delivered as per the law of the land.Appeal for peace from all sections
— Neiphiu Rio (@Neiphiu_Rio) December 5, 2021