“முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா,மிகுந்த அனுபவமும்,அறிவாற்றலும் கொண்டவர்”- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை:முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக ஆளுநரும்,ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார்.ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட 88 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் காலமானார்.
இதனையடுத்து,ரோசய்யா அவர்களின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்,பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் கொனிஜெட்டி ரோசய்யாவின் மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.இவர் மிகுந்த அனுபவமும், அறிவாற்றலும் கொண்ட மூத்த அரசியல்வாதியும் ஆவார்.துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்
Pained to hear about the passing away of Former Chief Minister of Andhra Pradesh and Former Governor of Tamil Nadu Dr. Konijeti Rosaiah, a man of vast experience, knowledge and a veteran statesman. I offer my deepest condolences to his family and friends in this hour of grief.
— M.K.Stalin (@mkstalin) December 4, 2021
மறைந்த ரோசய்யா அவர்கள் 2011-16 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்தார்.மேலும்,ஆந்திர மாநில முதல்வராக 2009 – 10 வரை பதவி வகித்தார்.இவர் இந்திய தேசிய காங்கிரஸின் எம்.எல்.சி., எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாக இருந்தவர் மற்றும் அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சர் பதவிகளை கையாண்டவர்.
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய போது, ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜின் பதவிக்காலம் 28 ஜூன் 2014 அன்று முடிவடைந்தபோது, வஜுபாய் வாலா 1 செப்டம்பர் 2014 அன்று பதவியேற்கும் வரை,ரோசய்யா அவர்களுக்கு கர்நாடக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.