2ndTest: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு..!
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 70 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் சேர்த்தனர்.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 28-வது ஓவரில் அஜாஸ் படேல் வீசிய 3-வது பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்சை கொடுத்து 44 ரன்னில் வெளியேறினார். சுப்மான் கில் 71 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்தார். பின்னர் அஜாஸ் படேல் 30-வது வீச அந்த ஓவரில் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஷ்ரேயாஸ் ஐயரின் அறிமுக டெஸ்ட் போட்டியான டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் சதம் விளாசி 105 ரன்களும், 2-வது இன்னிங்சில் அரை சதம் விளாசி 65 ரன்களும் அடித்தார்.
அடுத்து விருத்திமான் சாஹா களமிறங்க மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஆட்டம் தொடங்கியதில் இருந்து சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்த மயங்க் அகர்வால் சதம் விளாசினார். இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 70 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணியில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டை பறித்தார்.
களத்தில் விருத்திமான் சாஹா 25*, மயங்க் அகர்வால் 120* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.